- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 148 comments and to comment



1)           1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

      பிரபல பதிவர் திரு வெளியூர்க்காரன் அவர்கள்...


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது வேற ஒண்ணும்ல அண்ணேன் ...இங்குட்டு சிங்கப்பூருக்கு வந்தோன்னையே பூரா பயலும் என்ன ஒரு மனுசன்னு அடையாளம் கண்டுபுடிக்கரதுக்கு முன்னாடியே என் ஸ்லிப்பர பார்த்துட்டு ஊர்நாட்டான்னு கண்டுபுடிச்சு என்ன தம்பி வெளியூரா அப்டீன்னு கேப்பாங்கே.. நானும் உள்குத்து புரியாம வெளியூருன்னு சொல்றது  எதோ க்ரிப் போலருக்குன்னு, பெருமையா ஆமாம்னேன் வெளியூருன்னு சொல்லி சொல்லி பழகிரிச்சு.. அந்த கழுதய அப்புடியே ப்ளாகுக்கும் வெச்சுபுட்டேன்...


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஆமாம். நாங்க பெரிய சுஜாதா நொன்னை..இங்க காலடி எடுத்து வெச்சோம்...இப்புடி கேள்வி கேட்டே ஏத்திவிடுங்க எல்லா பயலையும்...ஏன் சார் நீங்க வேற.என் மொக்கைல காண்டாகி போய் இனிமே பேச வாய தொறந்தா நட்டுவாக்கிளி பூச்சிய எடுத்து நாக்குல விட்ருவோம்னு என் பிரெண்ட்ஸ்லாம்  மெரட்ட ஆரம்பிச்சிடாணுக...அப்பத்தான் கேள்விபட்டேன்..பதிவுலகம்னு ஒன்னு இருக்கு...அங்க போய் நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க..நீ ஜாலியா நாலு பதிவர்கள வன்புணர்ச்சி பண்ணலாம்...உன்னை திட்டி கண்டனம் தெரிவிச்சு நாலு பிரபல பதிவர்கள் பதிவு எழுதி அவங்க ஹிட்ஸ் வாங்கி எண்ணி பார்த்துட்டு உன்ன மனசார வாழ்த்துவாங்க...உடனே பதிவுலகம் உன்ன பிரபலமான எழுத்தாளர்னு ஒத்துக்கும்னு...அதேன், இந்த பக்கம் ஒதுங்குனேன்....இங்க என்னடான்னா தக்காளி பாதி பேரு பதிவெழுதறேன் பேர்வழிங்கற  பேர்ல படிக்கறவன் காதுல ஏறி வன்புணர்ச்சி பண்ணிகிட்டுதான் இருக்கானுவோ...சரி அது எதுக்கு இப்போ...வாங்க அடுத்த கேள்விக்கு போவோம்...

4)  உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?

எல்லாருக்கும் போய் பார்மாலிட்டி பண்ணேன்...அவெங்கே எடுத்த எல்லா வாந்திக்கும் நாத்தத்த பொறுத்துகிட்டு வோட்டு போட்டேன்..நான் வோட்டு போட்டுட்டேன்கரத அவேங்களோட பதிவுலையே கமெண்ட்ல சொல்லி எனக்கும் வோட்டு போட மறந்துடாதீங்கன்னு பிச்சை எடுத்தேன்...அவன் பதிவ போஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே போய் அய்..மீ தி பர்ஸ்டுன்னு கேண மாதிரி கமெண்ட் போட்டேன்...பதிவ படிக்காமையே மிக்க அருமை, அழகான பதிவு, ச்சே..பின்னு பின்னு என பின்னி விட்டீர்கள் போங்கள்...ச்சே எப்புடி இதெல்லாம்...இந்த மாதிரி டெம்ப்ளேட் நெறைய சேவ் பண்ணி வெச்சுகினு எல்லாரு வீட்டாண்டையும் போய் பதிவ படிக்காம சோறு மட்டும் வெச்சிட்டு வந்துருவேன்...(ச்சே ச்சே அது பிச்சை இல்லபா...மீன் புடிக்கரபோ தூண்டில்ல போடற புழு...அப்பதான  அவன் நமக்கு வந்து பிச்ச போடுவான்..ச்சே கமெண்ட் போடுவான்..) அப்டியே பிக் அப் பண்ணி இப்போ  நானும் பிரபல பதிவர் என எல்லோராலும் அன்போட அழைக்கபடறேன். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

இங்க நான் எத எழுதுனாலும் ரெட்டைவால்ஸ், இலுமினாட்டி, பட்டாப்பட்டி, ரோஸ்விக்கு இந்த நாலு நாதாரிங்களும் சேர்ந்து என் பட்டாபட்டிய அவுத்துட்டு குதூகலமா கும்மியடிச்சிருவாங்கே...அதனால நாம அடுத்த கேள்விக்கு போவோம்..

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவு எழுதி கோடிகணக்குல  சம்பாரிச்சு அதுல தங்கத்துல நாக்கு சுத்தம் செய்யற கருவி ஒன்னு வெளிநாட்லேர்ந்து வாங்கி நல்ல நாராசமா வழிக்கணும்...(எது எதையா..? நாக்க சார் நாக்க...!). அதுக்குதான் இவ்ளோ கஷ்டப்பட்டு இவனுககூட மல்லுகட்டிகிட்ருக்கேன்...இன்னும் நாலு வருசத்துல வாங்கிருவேன்...வாங்கி வழிச்சிட்டு அதுக்கு தனி பதிவு போடறேன்...வந்து வோட்டு போடுங்க...(இங்க பாதி பேரு ஊருக்கு போய்  கக்கூஸ் போனதெல்லாம் தனி பதிவா போட்ராணுக...நான் நாக்கு வழிச்சத  போடகூடாதா..என்ன இது போங்கா இருக்கு..)..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

வெளியூர்க்காரன் பட்டாப்பட்டி. (கொழம்பி சாவுங்கடா டேய்...)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஒரு சின்ன சம்பவத்த இவ்ளோ அழகா ரசிக்கற மாதிரி எழுத முடியுமான்னு விசாவ பார்த்து கொஞ்சம் வந்துருக்கு..சாதாரண வார்த்தைகள் இவர் பேனாலேர்ந்து வர்றபோ மட்டும் எப்டி இவ்ளோ காதல சொல்லுதுன்னு வசந்த கால பறவைகள பார்த்து கொஞ்சம், வாழ்க்கைய எவ்ளோ ரசனையோட வாழராருன்னு வீணாப்போனவன பார்த்து கொஞ்சம்,மனுஷனுக்கு நக்கல் வரலாம், ஆனா, நக்கலே மனுசனா வந்துருக்கானேன்னு பட்டாபட்டிய பார்த்து கொஞ்சம்.. இந்த நாயால மட்டும் எப்புடி எல்லா விசயத்த பத்தியும் ரசிக்கற மாதிரி எழுத முடியுதுன்னு ரெட்டைவால்ஸ  பார்த்து கொஞ்சம், சில நேரங்கள்ல மின்னற் பொழுதேதூரம் வலைப்பூவ பார்த்து....!


கோவபட்டது...ம்ஹும்..வெளியூர்க்காரன் கோவபட்ற அளவுக்கு இங்க எந்த பதிவருக்கும் வொர்த் இல்ல பாஸ்..


     9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
       பாராட்டிய மனிதர் யார்? 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்பு அண்ணேன் அஜித் அவர்களோட ரசிகர் ஒருத்தர் வந்து கமெண்ட்ஸ்ல என்னையும் என் குடும்பத்தையும் ரொம்ப அன்போட பாராட்டி விசாரிச்சிருந்தாறு...அவருதான் முதன்முதல்ல என்ன தொடர்பு கொண்டு அன்புள்ளத்தோட பாராட்ன மனித தெய்வம்...என் ஆசான்...(டேய் அமுக்குங்கடா இந்த இலுமினாட்டி பயல...வெளில விட்டா   உண்மையா சொல்லி என் மானத்த வாங்கிருவான்...டேய் டேய் முண்டறான் பாரு..விடாதீங்கடா...அமுக்குங்கடா...!) 

    10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
       தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பதிவர்களுக்கு நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க..கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மேட்டர் சொன்னேன்...வழக்கம் போல ஒருத்தனும் கேக்கல..தக்காளி கேக்கவும் மாட்டாங்கே...அதனால கமெண்ட்ஸ் போடற நண்பர்களுக்கு தமிழ் பதிவுலகத்தோட மிக முக்கியமான பிரபல பதிவர்ங்கர முறைல ஒரு மேட்டர் சொல்லலாமேன்னு...அண்ணேன்ங்களா வணக்கம்..நல்ல பதிவுகள கண்டிப்பா படிங்க..நல்ல எழுதாளர்கள மனசுலேர்ந்து பாராட்டி வளர்த்து விடுங்க...இங்க நெறைய பேர் ரொம்ப அருமையா எழுதறாங்க...அவங்கல்லாம் வளரனும்..அது உங்களாலதான் முடியும்..அதனால நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டுங்க...ஆனா நல்லா இல்லைனா ஜிஞ்சா அடிக்காதீங்க..அருமை, மிகவும் அழகான பகிர்வு.ஆகா அபாரம்.....இதெல்லாம் வேணாம்...பின்னி எடுத்துவிட்டீர்கள்  போங்கள் அப்டீன்னு உங்க கமேண்ட்ச கீழ  படிச்சிட்டு பதிவு நல்லாருக்கு போலருக்குன்னு மேல போனா அந்த நாய் பண்ணி மாதிரி வாந்தி எடுத்து வெச்சிருக்கு...! 

ஏன்யா...ஏன் இந்த மானம்கெட்ட பொழப்பு நமக்கு...நமக்கெல்லாம் சூடு சொரணை இருக்குன்னேன்..எது நல்லாருக்கு எது நல்லால்லைன்னு பார்த்த உடனே தெரியும்..நல்லா இல்லைனா நல்லா இல்லைன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லு..என்னா பண்ணிருவாங்கே...தக்காளி கோச்சுகிட்டா போறாங்கே....இல்ல எதிர்த்து எதாச்சும் உன்ன திட்ராங்கேளா...உடனே இங்க இப்டி நடந்துச்சுன்னு அனானிங்கற பேர்ல வந்து பட்டாப்பட்டி போலிஸ் ஸ்டேசன்ல அந்த டோமரோட லிங்கோட  ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துட்டு நீ போய் உன் வேலைய பாரு..நாங்க மிச்சத்த பார்த்துக்கறோம்...சிக்குனவன விடிய விடிய குமுர்றதுக்குன்னே இங்க ஒரு பெரிய குண்டர்கள் இராணுவமே இருக்கு. அவனுக எல்லாருமே ஆபிஸ் வேலைய பார்க்காம இங்கதான் வெட்டியா உக்காந்துருப்பானுவோ...எவனாச்சும் சிக்குவானான்னு...அதே மாதிரி, எங்க யாருக்குமே பதிவு எழுத தெரியாது..சிக்குனவன கமெண்ட் ஏரியால வெச்சு செதைச்சு கலாய்க்க மட்டும்தான் தெரியும்....(உம் : வெளியூர்க்காரன் ) 

நான் இந்த தொடர எழுத யார கூப்டாலும் வரமாட்டானுவோ..ஏன்னா என்னை இங்க எவனும் மதிக்க மாட்டான்...அதனால வாய பொளந்துகிட்டு கதை கேட்டது போதும்..கூட்டத்த கலைச்சிட்டு எல்லாரும் போய் ஆபிஸ் வேலைய பாருங்க போங்க..!

தக்காளி வந்துட்டாங்கே..!

தொடர் பதிவுன்னு ரயில் வண்டி விடுறதுக்கு..!

வெளியூர்க்காரன்..

Posted by Veliyoorkaran - - 48 comments and to comment


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
 
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
 கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
கண்ணாமூச்சி - பம்பரம் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"
கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"
இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
இப்படிக்கு துக்கங்களை தொலைக்க முயற்சிக்கும் ..!

அயல்நாட்டு அடிமை 
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
இது சத்தியமா என்னோடது கெடயாதுங்க...இத எழுதுனவர் யாருன்னு கூட எனக்கு தெரியாது..ஆனா இத எழுதறவர பார்த்தா ஒன்னே ஒன்னு சொல்லணும்...!

பின்னிட்ட வாத்யாரே ......!சூப்பர்...!

வெளியூர்க்காரன்..

Posted by Veliyoorkaran - - 41 comments and to comment




நான்கு மணி நேரத்திற்கு முன் வெளியூர்க்காரனில் போடப்பட்ட ஒரு பதிவை எதேச்சையாய் படித்து காண்டான வெளியூர்க்காரனின் வருங்கால மனைவி வெளியூர்காரனை முரட்டுத்தனமாய் போனில் பிடித்து கண்ணுமண்ணு தெரியாமல் காய்ச்சோ காய்ச்சின்னு காய்ச்சி, தாக்கோ தாக்குன்னு தாக்கியதில் பயந்து குலைநடுங்கி போன வெளியூர்க்காரன் அவர்கள் தான் அறிவித்த ரெண்டு அறிவிப்பையும் வாபஸ் பெற்றுள்ளார்..இனிமேல் தன அப்பாவை பற்றி எழுதினால் மூஞ்சி மோரகட்ட  எல்லாம் பேந்துவிடும் என அவர் மனைவி அன்போடு செல்லமாக அதட்டியத்தில்மாமனாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம்” பதிவு இத்துடன் கைவிடபடுகிறது என அறிவித்துள்ளார்...மற்றும்சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்” பற்றி அடுத்து ஒரு வரி எழுதினால் தங்களுக்கு தினப்படி கிடைக்கும் பல சலுகைகள் தடாலடியாக கட் செய்யப்படும் எனவும் ஒரு குறுந்தகவல் வந்ததால் பயத்தில் பம்மிய வெளியூர்க்காரன் அந்த பதிவிற்கான அறிவிப்பையும் வாபஸ் பெற்றுள்ளார்...இனிமேல் எந்த ஒரு பதிவையும் தங்கள் அனுமதி இல்லாமல் வெளியிடமாட்டேன் என தனது வருங்கால மனைவியிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுள்ளதாக ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...!

அவரின் கண்ணீர் பேட்டி இதோ...!

"எவ்ளவோ சொன்னாங்க சார்..ரோஸ்விக்கும், பட்டாபட்டியும்..மாமனார பத்தி எழுதாத எழுதாத...அடக்கி வாசின்னு...பட்டாப்பட்டி ஒரு படி மேல போய் வெளியூர்க்காரன் நாந்தான்னு உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிராதீங்கன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடியே அடிச்சுகிட்டாப்ள...அனுபவஸ்தங்கே சொல்றத கேட்ருக்கணும்...  கேக்கலையே...அய்யோ...எத சொல்ல..என்னத்த சொல்ல..ஒரு மணி நேரம் சார் போன்ல...முடியல..காது ஜவ்வு கிழிஞ்சிருச்சு...போன்லயே இந்த ராடு விழுதே...எப்புடியா நீங்கல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியோட குடும்பம் நடத்தறீங்க...உங்களுக்கெல்லாம் சூடு சொரணை எதாச்சும் இருக்கா...த்தூ... பொண்டாட்டிக்கு பயந்து  இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு ஆம்பளைங்கள்லாம் கேரளாவுக்கு அடிமாடா போயரலாம்யா...!

தக்காளி ப்ளாகும் வேணாம்..ஒரு எழவும் வேணாம்..!

எனக்கு ப்ளாக விட என் வாழ்க்கைதான் முக்கியம்...!"

இப்படிக்கு .

கூடிய விரைவில் அடிமாடாய் கேரளா செல்லுவதற்கு டிக்கெட் எடுத்தவன்..

வெளியூர்க்காரன்..